Saturday, January 31, 2009

பணம் சேர்க்க சிறந்த வழி என்ன?

பணம் தேவைப்படாதவர்கள் இந்த உலகத்தில் யாருமே இருக்க முடியாது. அப்படி யாரும் இருந்தால் இதைத் தொடர்ந்து படிக்காது வேறு வேலை இருந்தால் பாருங்கள். ஏனென்றால் பணத்தைப்போலவே நேரமும் பொன்னானது. சரி இனி பணம் தேவைப் படுபவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

பணம் சம்பாதிக்க ஒரு வழி வேலை செய்வது ..நன்றாகக் கவனியுங்கள் பணம் சம்பாதிக்கத்தான் . பணம் சம்பாதிப்பது என்பது வேறு பணம் சேர்ப்பது அல்லது சேமிப்பது என்பது வேறு.

பணம் சம்பாதிக்க நம்மில் பலர் ஒன்ரிற்கு மேலான வேலை ..வீட்டில் வேலை வெளியில் வேலை என்று வேலை வேலை என்றே ஓடித்திரிவார்கள். இறுதியில் மிஞ்சியது என்ன என்றால்..? அவர்களும் மேற்கூரையைப்பார்த்து எங்களைப் போலவே யோசிப்பார்கள். நானும் உங்களைப் போலவே தான்.

இத்தனை காலங்கள் உழைத்தது என்னாயிற்று என்று ..என்னால் இன்று வரை கண்டு பிடிக்கவே முடியவில்லை. ஒவ்வொரு வருட வக்கேஷனிலும் (vaccation)
நாடு நாடாகத் தேசாந்திரியாகச் சுற்றியதில் ஆகட்டும் , ஆள் பாதி ஆடை பாதி என்று யாரோ சொன்ன தத்துவத்தை சிரமேற்கொண்டு டீக்காக உடுத்தி சிங்காரித்துத் திரிந்ததில் ஆகட்டும், நண்பர்களுடன் சேர்ந்து ..அவன் அவன் தான் ..என்ற புகழ் மொழிக்கு மயங்கி பணத்தை அள்ளி விட்டுச் செலவழித்ததில் ஆகட்டும்.. இன்று வரை நாம் சொந்தமாக நாமாக வாழ்ந்திருக்கின்றோமா என்ற கேள்விக்கு எப்போதாவது பதில் தெரியக்கூடுமாயின் ..சிலவேளை கடந்த காலங்களின் காரியங்களுக்கு செலவுக்கணக்கு சரியாய் இருக்கலாம்.

செலவுக்கணக்குகளே கடந்த காலங்களை நிரப்பும் போது எப்படி சேமிப்பு இருக்கக் கூடும். சேமிப்பு மட்டுமா..? சேமிப்புத் தரும் எதிர்காலப் பாதுகாப்பு.. மன நிம்மதி...

காலங் கடந்தாயினும் சேமிப்பு என்னும் எண்ணம் மனதில் இழையோடுவதே பெரிய காரியம்... இல்லையென்றால் இவ்வாறு குந்தியிருந்து அதைப்பற்றியே மணிக்கணக்காகா..நாட்கணக்காக சிந்தித்துக் கொண்டிருந்திருக்க என்னால் முடிந்திருக்குமா..?

சிந்தித்ததனால்தானே நானும் பணமும் கட்டிப்புரண்டு அடித்துக் கொண்ட இந்த சுவாரஷ்யமான கதையே உருவாகியிருக்கின்றது....

முன்னுரை இத்துடன் போதும் என்று நினைக்கின்றேன்.. இன்னும் தொடர்ந்தால் உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் போரடிக்க ஆரம்பித்து விடும்.. ஏனெனில் என்னால் இவ்வளவு சீரியஸ் ஆக எப்போதும் எழுத முடிவதில்லை.. (தொடரும்)

No comments:

Post a Comment